செய்திகள்

இலங்கையில் இன்று 6 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (18) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 256 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 6 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 270 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் இன்றும் (18), ஒருவர் நேற்றும் (17), ஜனவரி 14 ஒருவரும், ஜனவரி 15 இருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

265ஆவது மரணம்
கொழும்பு 03 (கொள்ளுபிட்டி) பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு, என அறிவிக்கப்பட்டுள்ளது.

266ஆவது மரணம்
கொழும்பு 15ஐச் (மோதறை/ மட்டக்குளி) சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (15) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.

267ஆவது மரணம்
மோதறை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர், முதியோர் இல்லத்தில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (15) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.

268ஆவது மரணம்
களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வியாழக்கிழமை (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, இருதய நோய் நிலை மற்றும் உக்கிர நீரிழிவு நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

269ஆவது மரணம்
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இரணவில சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (18) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட புரொன்கோ நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.

270ஆவது மரணம்
இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (18) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button