செய்திகள்

இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 43 பேர் பலி

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (06/25) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,905 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 172 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 249,926 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button