செய்திகள்

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் : 30 வயதுக்கும் குறைந்த இருவர் பலி

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 65 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (06/22) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

40 ஆண்களும், 25 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 30 வயதுக்கும் குறைந்த இருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட 10 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 53 பேரும் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,769 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button