செய்திகள்

இலங்கையில் பெருகும் யானை+மனித+ மோதலில் 47 பேர் பலி.!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலான யானைகள், துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. பட்டாசு பயன்பாடு, விஷம் கொடுத்தல் மற்றும் மின்வேலி பயன்பாடு உள்ளிட்ட மனித செயற்பாடுகள் – யானைகளின் உயிரிழப்பிற்கு காரணமென வனஜீவராசிகள் திணைக்களம் கூறியுள்ளது.

யானைகளை கொன்ற குற்றச்சாட்டில் கடந்த 06 மாதங்களில் 27 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, இந்த காலப்பகுதியில் யானை – மனித மோதலில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது நிலவும் யானை – மனித மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட யானை வேலிகளை பராமரித்தல் மற்றும் திருத்த பணிகளுக்காக சுமார் ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட அடையாளங் காணப்பட்ட பகுதிகளில் இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய பகுதிகளில் தேவைக்கேற்ப ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினரே இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button