செய்திகள்

இலங்கையில் பெற்றோலுக்கு தட்டுப்பாடா ?

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லையென பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான தகவலினால், நாட்டின் சில பகுதிகளில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் வாகனங்களை நிறுத்திவைத்திருந்தனர்.

இதன் காரணமாக கொழும்பு, காலி வீதி மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை, நேற்று பெற்றோல் நிலையங்கள் பகிஷ்கரிப்பு எனும் செய்தி பரவியதால் கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையங்களில் கடுமையான சன நெரிசல் நிலவியது.

மேலும் , எரிபொருள் எடுத்துவரும் கப்பலொன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளாந்த டீசல் விநியோகம் தொடர்பாக நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லையெனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டமைப்பிற்குள் 80 சதவீத டீசல் தொகை இன்று மாலைக்குள் விநியோகம் செய்யப்பட்டுவிடும் எனவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com