செய்திகள்
இலங்கையில் பேஸ்புக் தடையை நீக்க ஜனாதிபதி உத்தரவு
பேஸ்புக் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
கண்டியில் இடம் பெற்ற சம்பவத்துக்கு பிறகு இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த தடை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி படிப்படியாக வைபர் , வட்ஸ்அப் மீது இருந்த தடை நீக்கப்பட்டதுப் போல பேஸ்புக் தடையும் இன்று நீக்கப்பட உள்ளது .