செய்திகள்

இலங்கையில் மிக ஆபத்தான டெல்டா கொவிட் திரிபு : மேலும் 15 பேர் அடையாளம்

இந்தியாவில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொவிட் வைரஸ் முதலில் இனங்காணப்பட்ட தெமடகொட பகுதியில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெமடகொட, அராமயா வீதியை சேர்ந்த 129 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களில் 15 பேருக்கே டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தற்போது இலங்கையில் பரவிவரும் B.117 கொவிட் திரிபை காட்டிலும் 50 மடங்கு வேகத்தில் பரவக்கூடியது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button