செய்திகள்

இலங்கையில் மிக ஆபத்தான டெல்டா கொவிட் திரிபு : மேலும் ஒருவர் அடையாளம்

இந்தியாவில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிலியந்தல – கஹதுடுவ, ஜயலியகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொற்றுக்காளானவர் பொலன்னறுவை கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த 47 வயதான நபர் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணி புரியும் தொழிலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் தாயார், மனைவி மற்றும் மகன் உட்பட 50 குடும்பங்கள் ஜயலியகம பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கஹதுடுவ, ஜயலியகம பிரதேசத்துக்கு பயணத் தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும் மக்கள் சரியான முறையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு சுகாதார விதிமுறைகளை மக்கள் மீறி செயற்படுவார்களாயின் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button