செய்திகள்

இலங்கையில் மிக ஆபத்தான டெல்டா கொவிட் திரிபு : இதுவரை 24 பேர் அடையாளம்

நாட்டில் டெல்டா கொவிட் திரிபு வைரஸ் தொற்றுக்குள்ளான 24 நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும் மக்கள் சரியான முறையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு சுகாதார விதிமுறைகளை மக்கள் மீறி செயற்படுவார்களாயின் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button