Breaking Newsசெய்திகள்

இலங்கையில் மிக ஆபத்தான டெல்டா கொவிட் திரிபு : ஐவர் அடையாளம்

இந்தியாவில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொவிட் வைரஸானது இலங்கையில் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பெற்றுக் கொண்ட பரிசோதனை மாதிரிகளின் ஊடாக வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொவிட் திரிபு தொற்று உறுதியான 5 பேர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தற்போது இலங்கையில் பரவிவரும் B.117 கொவிட் திரிபை காட்டிலும் 50 மடங்கு வேகத்தில் பரவக்கூடியது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button