செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 54 கொரோனா உயிரிழப்பு : முழு விபரம்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 54 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (08) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த மரணங்கள் மே 10 – ஜூன் 07 வரை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 54 பேரில், 22 பேர் ஆண்களும், 32 பேர் பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும்.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 1,843 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com