Breaking Newsசெய்திகள்

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 67 கொரோனா உயிரிழப்பு : முழு விபரம்.!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 67 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (09) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும்.

குறித்த மரணங்கள் மே 17 – ஜூன் 08 வரை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 67 பேரில், 43 பேர் ஆண்களும், 24 பேர் பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மரணம் எதுவும் பதிவாகவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 1,910 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com