செய்திகள்

இலங்கையில் மேலும் 3 கொவிட் மரணங்கள் பதிவு.

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (02) அறிவித்துள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 211 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்றும் (02) ஒருவர் கடந்த  (31) மற்றையவர் கடந்த புதன்கிழமையும் (30) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

209ஆவது மரணம்
கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 93 வயதான பெண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட பல்வகை சிக்கல் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

210ஆவது மரணம்
அடையாளம் உறுதிப்படுத்தப்படாத மருதானையில் அடையாளம் காணப்பட்ட, 70 வயதான ஆண் ஒருவர், மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.

211ஆவது மரணம்
கொழும்பு 12 (வாழைத்தோட்டம்/ புதுக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து, கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (02) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் சிக்கலான சிறுநீரக தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com