செய்திகள்

இலங்கையில் மேலும் 45 மரணங்கள் : இன்று இதுவரை 1,917 தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (06/23) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,814 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் இதுவரை ஆயிரத்து 917 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 12 ஆயிரத்து 825 ஆக உயர்வடைந்துள்ளது.

Related Articles

Back to top button