விளையாட்டு

இலங்கை அணிக்கு தண்டம்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் மெதுவாக பந்துவீசியமைக்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி யின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி அந்தப்போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர்கள் அனைவருக்கும் போட்டிக்கட்டணத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download