செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி வீரர்களுக்கு புதிய தங்குமிட விடுதி திறந்து வைப்பு..

இலங்கை அணி வீரர்களுக்கு புதிய தங்குமிட விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தின் உள்ளக அரங்கில் இந்த தங்குமிட விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

தங்குமிட விடுதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்ககார கலந்துக் கொண்டிருந்தார்.

இதன்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள தங்குமிட விடுதியை குமார் சங்ககார திறந்து வைத்தார்.

நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button
image download