செய்திகள்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உட்பட 15 பேர் விடுவிப்பு.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திங தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் 15 பேர் இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறி நாடாளுமன்ற சுற்றுவட்டம் அருகே போராட்டம் நடத்தியதற்காக 16 பேரும் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button