செய்திகள்

இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 16 தொழிற்சங்கங்கள் கொழும்பில் மேதின பேரணி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பல்வேறு பேரணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சுமார் 16 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த மே தின பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தன.

இதேவேளை, வருடாந்தம் மே மாதம் முதலாம் திகதி வழங்கப்படும் மே தின விடுமுறையை இரத்துச் செய்து அதனை 7ஆம் திகதிக்கு மாற்றியுள்ள அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டிப்பதாக, இலங்கை வர்த்தக தொழிநுட்ப மற்றும் பொது தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

புறக்கோட்டையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணியின் போது, அந்த சங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இது குறித்த துண்டு பிரசுரங்களைதொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பல்வேறு பேரணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சுமார் 16 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த மே தின பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தன.

இதேவேளை வருடாந்தம் மே மாதம் முதலாம் திகதி வழங்கப்படும் மே தின விடுமுறையை இரத்துச் செய்து அதனை 7ஆம் திகதிக்கு மாற்றியுள்ள அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டிப்பதாக இலங்கை வர்த்தக தொழிநுட்ப மற்றும் பொது தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

புறக்கோட்டையில் இன்று முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணியின் போது அந்த சங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.அத்துடன் இது குறித்த துண்டு பிரசுரங்களையும் அந்த சங்கம் விநியோகித்தது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்திர செல்வன் இந்த மேதினம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது, தொழிலாளர் தினத்தில் மாற்றம் செய்தமை, தொழிலாளர்களை இழிவுப்படுத்தும் செயலாகவே தாம் கருதுவதாக அந்த சங்கம் சார்பாக குறிப்பிட்டார்.

இதேவேளை தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தொழிலாளர்களின் துயரங்களை நல்லாட்சி அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இன்றைய தினம் மேதின பேரணிகளை தலைநகரில் ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார்.

குறித்த பேரணி காரணமாக காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button