நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் ஒன்றில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கப்படாமல் கோட்ட அதிகாரியினால் சில பாடசாலை அதிபர்கள் வரவழைக்கப்பட்டு அவரால் நேரடியாகவே பாதணிகள் வழங்கப்பட்டது தொடர்பாக மத்திய மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் மற்றும் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பாக கவனத்துக்கு கொண்டு வந்ததோடு, நுவரெலியா தேர்தல் உதவி ஆணையாளரிடமும் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டத்தாக இலங்கை ஆசிரியர் சங்க நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கும் போது குறித்த அதிகாரி கடந்த காலங்களில் அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர் என்பதோடு தொடர்ந்தும் இவ்வாறு அதிகாரங்களை அரசியல் சார்பாக மலையக கல்வி துறையில் மேற்கொள்வது தவறான நடவடிக்கை எனவும் சுட்டி காட்டினார்.