செய்திகள்விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இறுதி T20 போட்டி இன்று

இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இறுதி T20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. சவுத்ஹெம்டனில் இரவு நேர ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நேற்று முன்தினம் கார்டிபில் இடம்பெற்ற 2வது டி20 போட்டியில் டக்வத்லூய்ஸ் முறை அடிப்படையில் 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்றது. குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும், அணித்தலைவர் குசல் பெரேரா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மார்க்வூட் மற்றும் ஆர்டில் ரஷீட் ஆகியோர் தலா இரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். அதற்கமைய, 112 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெத்தாடிய போது 4 விக்கட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்த வேலையில் போட்டிக்கு மழையால் தடை ஏற்பட்டது. இதனால் போட்டி சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் போட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டபோது டக்வத் லூய்ஸ் முறை அடிப்படையில் 18 ஓவர்களில் 103 என்ற வெற்றியிலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. 16.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து குறித்த இலக்கை இங்கிலாந்து அணி அடைந்தது. லியாம் லெவிங்ஸ்டன் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் சேம் பில்லிங்ஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக லியாம் லெவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கை அணியும் இன்றைய தினம் களமிறங்கவுள்ளன.

Related Articles

Back to top button