செய்திகள்விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது T20 இன்று

இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கார்டிப்பில் இரவு நேர ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில், நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் 8 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இதன்படி, நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தசுன் சானக்க 50 ஓட்டங்களையும் அணித்தலைவர் குசல் ஜனித் பேரேரா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் சேம் குரன் மற்றும் அடில் ரஷீட் ஆகியோர் தலா இவ்விரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். அதற்கமைய 130 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது.

Related Articles

Back to top button