சினிமா
இலங்கை இசையமைப்பாளரின் பாடலுக்கு இந்திய அரசின் கௌரவ விருது
இசையமைப்பாளர் டிரோன் பெர்னாண்டோவின் இசையில் உடல் உறுப்பு தானம் சம்பந்தமான விழிப்புணர்வுப் பாடலொன்று “தானம் செய்”என்னும் தலைப்பில் அண்மையில் வெளிவந்திருந்தது. உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் இப்பாடலை ஜெய செல்வகுமார் தயாரித்திருந்தார்.
பாடலின் தயாரிப்பாளர் ஜெய செல்வகுமாருக்கு இவ்விருதினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிஸ்வாமி வழங்கி வைத்தார்.
இப்பாடலின் ஒலி வடிவம் இலங்கையில் உருவாகி இந்தியாவில் காட்சி வடிவமைக்கப்பட்டது. . முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் இப்பாடல் காட்சியில் தோன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரோன் பெர்னாண்டோ இசையமைத்து அவரும் வருண் துஷ்யந்தனும் பாடல் வரிகள் எழுதிய இப்பாடலுக்கு இலங்கையின் இளம் பாடகர்கள் அவினாஷ், ஜீ.கே மற்றும்அம்ரிதா ஆகிரியோர் குரல் கொடுத்திருந்தனர்.