உலகம்

இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கியது பிலிப்பைன்ஸ்

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த அனைத்து பயணிகளுக்குமான பயணத் தடையினை பிலிப்பைன்ஸ் திங்கட்கிழமை நீக்கியுள்ளது.

அதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

எனினும் மேற்கண்ட 10 நாடுகளிலிருந்து பிலிப்பைன்ஸ் செல்லும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்ட தடை, பின்னர் கொரோனா வைரஸின் மிகவும் தொற்றுநோயான டெல்டா மாறுபாடு பரவுவதைத் தடுக்க ஜூலை மாதத்தில் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download