விளையாட்டு

இலங்கை எதிர் பங்களாதேஷ் ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்.

(ராகவ்)

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் முதல் போட்டி டாக்கா மைதானத்தில் நாளை முற்பகல் 12 முப்பதுக்கு பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

அனுபவ வீரர்களும் முன்னாள் தலைவர்களுமான டினேஸ் சந்திமால் , திமுத் கருணாரத்ன , ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் இந்த தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.

இதற்கமைய குஜல் ஜனித் பெரேராவின் தலைமையில் இந்த தொடரில் இலங்கை அணி களம் காண்கின்றது.

குசல் மென்டிஸ் இலங்கை அணியின் உப தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

சகலதுறை வீரர் சகீர் அல் ஹசன் விக்கெட்
காப்பாளர் முஸ்பிகுர் ரஹூம் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளமை பங்களாதேஷ் அணியை பொருத்தவரையில் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.

இதேவேளை பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை அணியின் பிரபல வீரர்கள் இருவர் நேற்று நடத்தப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com