...
செய்திகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 23 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கைதானவர்கள், காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen