விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து மூன்று வீரர்கள் இடைநிறுத்தம்.

உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து மூன்று வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் மூவரையும் உடனடியாக நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்  ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button