செய்திகள்

இலங்கை சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை : ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்.!

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன – இலங்கை நடப்புறவு தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வைத்தியசாலையில் 200 சிறுநீரக நோயாளர்களுக்கு தங்கியிருந்து சிகிச்சை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரச உதவியாக இவ்வைத்தியசாலை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சீன பாரம்பரிய கட்டிட கலை அம்சங்களுடன் 16 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வைத்தியசாலை கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நினைவு படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்தியசாலை கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி உள்ளிட்டோர் வைத்தியசாலை கட்டிடத்தை சுற்றி பார்வையிட்டனர்.

இதற்கென 1200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. முப்பது மாதங்களில் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகங்களை பொருத்துவதற்கான நவீன வசதிகளுடன் கூடிய 5 சத்திரசிகிச்சை கூடங்களும் இதில் அடங்கியுள்ளன. 20 அதி தீவிர சிகிச்சை பிரிவுகட்டில்களும் 100 இயந்திரங்கள் கொண்ட இரத்த சுத்திகரிப்பு பிரிவும் இதில் அடங்கியுள்ளன. அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வு கூட வசதி, எஸ்ரே, சி.ரி.ஸ்கேன் சேவைகளும் நவீன கேட்போர் கூட வசதிகளும் இதில் அடங்கியுள்ளன.

300 வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிடம் மற்றும் மருத்துவமனைப் பணிக்குழாமைச் சேர்ந்த அனைவருக்குமான தங்குமிட வசதிகளையும் இது கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, ரொஷான் ரணசிங்க, சிறிபால கம்லத், இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஹொங், நாடாளுமன்ற உறுப்பினர்களான அமரகீர்த்தி அத்துகோரல, சுரேன் ராகவன், எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, உள்ளிட்டோர் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

May be an image of one or more people, people standing and outdoors
May be an image of one or more people and people standing
May be an image of outdoors
May be an image of 1 person, sitting, standing, hospital and indoor
May be an image of 1 person, standing, sitting and indoor
May be an image of 1 person, standing, indoor and hospital
May be an image of outdoors
May be an image of one or more people, people standing and indoor
May be an image of 1 person, standing, sitting, office and indoor
May be an image of 2 people, people standing and indoor
May be an image of one or more people, people standing and indoor

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com