செய்திகள்

இலங்கை – டோகோ ஜனாதிபதிகள் சந்திப்பு

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள டோகோ ஜனாதிபதி பவுயர் எசோசிம்னா க்னாசிங்பே (Faure Essozimna Gnassingbe) நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த டோகோ ஜனாதிபதியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மிகுந்த நட்புறவுடன் வரவேற்றார்.

டோகோ ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வழங்கினார்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, அர்ஜுன ரணதுங்க, ரஞ்சித் அலுவிகாரே, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்டோர் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

Related Articles

Back to top button