செய்திகள்

இலங்கை துறைமுகத்திற்கு வந்த ஜெர்மனிய போர் கப்பல்..

பயர்ன் (Bayern) எனப்படும் ​ஜெர்மனியின் போர் கப்பல், நேற்றைய தினம் (17) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் நாட்டை விட்டு வௌியேறுவதற்கு முன்னதாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனியின் போர் கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.

ஜெர்மனியின் பயர்ன் போர் கப்பல் 1996 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்டது.

அத்துடன், கடற்பரப்பு மற்றும் வான் பரப்பை கண்காணிப்பதற்கான வசதிகளும் அதி சக்தி வாய்ந்த ரேடார் கட்டமைப்பும் இதில் உள்ளது.

Related Articles

Back to top button