...
விளையாட்டு

இலங்கை தேசிய கபடி அணிக்கு முதற்கட்ட தேர்வில் கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று பெண்கள் தெரிவு.

இலங்கையின் தேசிய கபடி அணியில் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி யுவதிகள் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் நாடளாவிய ரீதியில் 25 பேர் கலந்துகொண்டுள்ளனர்
இதில் 18 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 18 பேரில் கிளிநொச்சி யுவதிகள் மூவரும் அடங்குகின்றனர்.
கிளிநொச்சி சிவநகர் பாடசாலையின் பழைய மாணவிகளான இவர்கள் உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

ஆரம்ப கட்ட பயிற்சியை ஆசிரியர் இராமநாதன் பரஞ்சோதி அவர்களிடம் பெற்ற இவர்கள் கடந்த காலங்களில் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்குப்பற்றியுள்ளனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய மட்ட கபடி போட்டிக்கான இலங்கை அணியின் முதற்கட்ட தெரிவில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்டுள்ள 18 பேரிலிருந்து இறுதியாக 12 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்த தெரிவிலும் இவர்கள் தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen