செய்திகள்

இலங்கை தேயிலை” என்ற பெயருக்கான உலகளாவிய அபிமானம் என்பது, அதன் தரம் காரணமாகவே உருவானது.

“இலங்கை தேயிலை” என்ற பெயருக்கான உலகளாவிய அபிமானம் என்பது, அதன் தரம் காரணமாகவே உருவானது.
உலகத் தேயிலைச் சந்தையில் போட்டியிடுவதற்காக –
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையுடன் அல்லது வேறு மூலப்பொருட்களுடன்,
எமது தேயிலையைக் கலப்படம் செய்து ஏற்றமதி செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து இருந்தது.
இருப்பினும், எமது தேயிலையின் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்றது.
அதன் பெறுபேறாக, 2019ஆம் ஆண்டை விடவும், ஒரு கிலோகிராம் தேயிலையை, 83 ரூபாய்  அதிக இலாபத்துடன் விற்பனை செய்வதற்கு, தொழிற்சாலைகளுக்குச் சந்தர்ப்பம் கிட்டியது.
2021ஆம் ஆண்டாகும் போது, இந்த விலை மேலும் அதிகரித்தது.
அது மட்டுமன்றி, தேயிலை உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, 2021ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதக் காலப்பகுதியில், தேயிலைத் தொழில் ஈட்டிய அந்நியச் செலாவணி 81 பில்லியன் ரூபாயாகும்.
 
கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களைப் பார்க்கிலும், 17 பில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது.
உலகச் சந்தையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் – எமது “Ceylon Tea” தேயிலையின் கிலோகிராம் ஒன்றுக்கு, 482 டொலர்கள் அதிக பெறுமதி அந்நியச் செலாவணியாக எமக்குக் கிடைத்திருக்கின்றது.
நாம் மேற்கொண்டது ஒரு கஷ்டமான காரியமாயினும், சரியான தீர்மானங்களை நாம் எடுப்பதன் பெறுபேற்றின் வெற்றிக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
#கோட்டாபயராஜபக்‌ஷ #gotabayarajapaksa #GR

Related Articles

Back to top button