விளையாட்டு

இலங்கை தொடருக்கு தயார் -ஷிகர் தவான்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகியுள்ளதாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ளன.
அடுத்த வருடத்தில் நடைபெறவுள்ள சர்வதேச இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் உபாதை காரணமாக விளையாடாத  ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்காக இந்திய குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அபார திறமையை வெளிப்படுத்த முடியும் என ஷிகர் தவான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது தொடர் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை  அணி எதிர்வரும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
image download