இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக சபை தெரிவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அதன் பொது சபை ஊடாக ஜனநாயக ரீதியில், புதிய நிர்வாக சபை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்நிகழ்வு, கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் இன்று(25), தலைவர் முத்து சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் பெயர் விவரங்கள் வருமாறு:
தலைவர்: முத்து சிவலிங்கம் ,பிரதி தலைவர்: அம்மாசி ராமையா , பொதுச்செயலாளர்: ஆறுமுகன் தொண்டமான், அத்துடன் பிராந்திய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட உபதலைவர்கள்-நுவரெலியா – எம்.ரமேஷ்வரன் ,தலவாக்கலை – பி.சக்திவேல் , கண்டி – டீ.மதியுகராஜா, மாத்தளை – சிவஞானம், பதுளை – செந்தில் தொண்டமான், ஹட்டன் – கணபதி கனகராஜ் , இரத்தினபுரி – எஸ்.ராஜமணி, மாரிமுத்து, கணேசமூர்த்தி, ரவீந்திரன்,
சதாசிவன்.
தேசிய சபை அமைப்பாளர்களாக பி.ராஜதுரை, சிவராஜா,
திருமதி.அனுஷியா சிவராஜா, வெள்ளையன் தினேஷ், எஸ்.அருள்சாமி ஆகியோரும்,
இளைஞர் அணி உதவி செயலாளர்களாக பி.சசிக்குமார், ஆர். பிரசாத், மற்றும் மகளிர் அணி உதவி செயலாளர்களாக கே.செந்தமிழ் செல்வி, பி.சுந்தரம்பால் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.