...
அரசியல்செய்திகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு எதிரானவர்கள் இல்லை -T.V. சென்னன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. தனிநாடு கோரிக்கையை ஆவரங்கால் மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றும் போது அக்கூட்டணியின் தலைவராக இருந்த சௌமிய மூர்த்தி தொண்டமான் தனிநாட்டு கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி செயலாளருமான T.V. சென்னன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்தில் மாத்திரமின்றி இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் சிங்கள மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவையும் பேணி வருவதால் தனிநாட்டு கோரிக்கையை ஏற்று கொள்ள முடியாது என்று அக்காலத்திலேயே அக்கூட்டணியில் இருந்து சௌமியமூர்த்தி தொண்டமான் வெளியேறினார். எனவே தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் காட்டிய வழியையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றது.

இன்றைய காலப்பகுதியில் ஒருசிலர் வடகிழக்கு மக்களுடன் இணைந்து இந்திய வம்சாவளி மக்களையும் போராட்ட வழியில் ஈடுபடுத்த முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் T. V. சென்னன் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen