அரசியல்செய்திகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி உறுப்புரிமையிலிருந்து அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர் செல்வம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி உறுப்புரிமையிலிருந்து அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர் செல்வம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அவர் செயற்பட்டமைக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்று முதல் அமுலாகும் வகையில் கதிர் செல்வம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பி.சீ.ஆர் சோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளருக்கும் அறிவிக்காது முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடிய மூன்று கூட்டங்களில் கதிர் செல்வன் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர் செல்வத்திற்கு தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக ஒழுக்காற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button