செய்திகள்விளையாட்டு

இலங்கை படுதோல்வி : ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து.!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

லண்டன்- கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று கொண்டது. இதில் அணியின் துடுப்பாட்டத்தில் தனஞ்ஜய டி சில்வா 91 ஓட்டங்களை அதிகபடியாகப் பெற்றுக் கொடுத்தார். போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து 242 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 43 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது 244 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் அணித்தலைவர் இயொன் மோர்கன் 75 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக் கொடுத்த அதேவேளை, ஜோ ரூட் 68 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் சேம் கர்ரன் தெரிவுசெய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் பிரிஸ்டொல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Articles

Back to top button