அரசியல்செய்திகள்

இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை திருத்தியமைப்பதற்காக ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிவில் பிரஜைகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் – வெகுசன ஊடக அமைச்சு.

இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை  திருத்தியமைப்பதற்காக  ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிவில் பிரஜைகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை வெகுசன ஊடக அமைச்சு கோரியிருக்கிறது.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ள இலங்கை பத்திரிகை பேரவையை ‘கட்டமைப்பு ரீதியில் மறுசீரமைத்து அச்சு, இலத்திரனியல் மற்றும் புதிய  ஊடகங்களை உள்ளடக்கிய வகையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தீர்ப்பளிக்கும் நிறுவனமாக மீளமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பொருட்டு தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தை திருத்தியமைப்பதற்காக ஊடகவியலாளர்கள்  உள்ளிட்ட  சிவில் பிரஜைகளின்  கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு வெகுசன ஊடக அமைச்சு உத்தேசித்துள்ளது.

எனவே திருத்தப்படும் சட்ட வரைபில் உள்ளடக்குவதற்கு பொறுத்தமான சமகால முன்மொழிவுகளை மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஏற்புடைய வரைபை தயாரிக்கும் செயற்குழுவுக்கு சமர்பிப்பதற்காக, செயலாளர், வெகுசன ஊடக அமைச்சு , இல.163 , எசிதிசி மெதுர கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 5 எனும் முகவரிக்கு அல்லது [email protected] , [email protected] , [email protected]  என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்க முடியும். 

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com