செய்திகள்

இலங்கை பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்.!

இலங்கை பயணிகள் எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதை தற்காலிகமாக இடை நிறுத்த எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய அமீரக அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அமையவே, இச்சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த, எமிரேட்ஸ் விமானச் சேவை தீர்மானித்துள்ளது. அத்துடன், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேற்படி நாடுகளுக்குச் சென்றிருந்த எந்தவொரு பயணியும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்குப் பிரவேசிக்க எதிர்வரும் 15 ஆம்திகதி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button