விளையாட்டு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்தமையே அதற்கான காரணமாகும்.

இலங்கை மற்றும் 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவிருந்தது.


கராய்ச்சியில் நடைபெறவிருந்த இந்தப்போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவிருந்தது.

இந்த நிலையில் மைதானத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக பெய்த அடை மழையின் காரணமாக போட்டியை முடிவின்றி கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

2009 ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச அணியொன்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்க்கது.

இந்த தொடரில் இலங்கை அணியின் சிரேஷ்ட மற்றும் நட்சத்திர வீரர்கள் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button