...
செய்திகள்

இலங்கை  மின்சார  சபை  ஊழியர்களின்  விடுமுறை  இரத்த..

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மின்சார சபையின் அதிகாரி இதனை தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் பிரகாரம், பிரதிப் பொது முகாமையாளரின் அனுமதியின்றி இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை அலுவலக வாகனங்கள் மூலம் கொழும்புக்கு வருவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது, அவ்வாறு செய்தால் அது அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக கருதப்படும் எனவும் அவர் மேலும் அறிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen