செய்திகள்

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்; இந்தியா மறுப்பு

இலங்கையின் வடபகுதி கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டனர் என வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைக்கான இந்திய தூதரகம் நிராகரித்துள்ளது.

போதைப்பொருள் தொடர்பில் கேள்வியெழுப்பி மோசமான முறையில் இந்திய கடற்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிக்கச்சென்ற இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களுடன் இரண்டு படகுகள் நேற்று திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், கடுமையான தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் மூவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என, இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Articles

Back to top button