செய்திகள்

இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது.!

சீசெல்ஸ் கடல் எல்லையில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 12 பேரை சீசெல்ஸ் கரையோர பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இரண்டு படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீசெல்ஸில் இந்த வருடம் மே மாதத்தின் பின்னர், இலங்கையை சேர்ந்த 5 படகுகள் அந்நாட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button