ஆன்மீகம்

இலங்கை- வடமாகாணம் வடமராட்சி நவிண்டில் அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

தாயாக இருந்துலகைத் தாங்கிநிற்கும் அன்னை
தளராத மனவுறுதி தந்திடவே வந்தாள்
பார்போற்ற நாம் வாழ என்றும் அவள் அருள்வாள்
நவிண்டிலூர் கோயில் கொண்ட சிவகாமி அம்மன் தாள் சரணம்

அற்புதங்கள் பல செய்து அருள் பொழியும் அன்னை
அன்பு கொண்டோர் மனங்களிலே இருந்துறைய வந்தாள்
அச்சமின்றி நிம்மதியாய் வாழ என்றும் அவள் அருள்வாள்
நவிண்டிலூர் கோயில் கொண்ட சிவகாமி அம்மன் தாள் சரணம்

தைப்பூச நன்னாளில் சங்காபிஷேகம் காணும் எங்கள் அன்னை
தைரியமாய் முன்செல்ல வழி தரவே வந்தாள்
தொல்லையில்லா நல்வாழ்வை என்றும் அவள் அருள்வாள்
நவிண்டிலூர் கோயில் கொண்ட சிவகாமி அம்மன் தாள் சரணம்

எப்போதும் உடனிருந்து எமை இயக்கும் அன்னை
என்றுமெமைக் காத்திடவே விரைந்து இங்கு வந்தாள்
இப்புவியில் நிம்மதியாய் வாழ என்றும் அவள் அருள்வாள்
நவிண்டிலூர் கோயில் கொண்ட சிவகாமி அம்மன் தாள் சரணம்

வட இலங்கை தனிலிருந்து ஆட்சி செய்யும் அன்னை
வளமளித்து, நலமளித்து வாழச்செய்ய வந்தாள்
தரமான பெருவாழ்வை என்றும் அவள் அருள்வாள்
நவிண்டிலூர் கோயில் கொண்ட சிவகாமி அம்மன் தாள் சரணம்

நேர்மையுடன் வாழ்பவர்கள் நலன் காக்கும் அன்னை
நித்தமும் உடனிருந்து வழிகாட்ட வந்தாள்
நம்பியவள் அடிதொழுவோர்க்கு என்றும் அவள் அருள்வாள்
நவிண்டிலூர் கோயில் கொண்ட சிவகாமி அம்மன் தாள் சரணம்.

Related Articles

Back to top button