செய்திகள்

இலங்கை வந்திறங்கிய மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்!!

நாளை இடம்பெறவுள்ள இலங்கையின் 71வது தேசிய தினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் 15 மூத்த அதிகாரிகளுடன் வந்த குறித்த தூதுக்குழு இந்த மாதம் 23 ஆம் திகதி மாலைதீவுக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இன்று வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button