செய்திகள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் எச்சரிக்கை !

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக மக்களிடம் இருந்து சில கும்பல்கள் பணத்தை மோசடி செய்து வருகின்றன. இவ்வாறான போலி முகவர் நிலையங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக ஜப்பான், ருமேனியா, தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிய பல சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் அவர்கள் பெற்று தரக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை அதன் இணையத்தளத்தின் மூலம் பெற்றுகே கொள்ளுமாறு SLBFE மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஏஜென்சியின் சட்டப்பூர்வ தன்மையை சரிபார்க்கும் முன் பணத்தை கொடுக்கவோ அல்லது கடவுச்சீட்டை ஒப்படைக்கவோ வேண்டாம் என்றும் பணியகம் மக்களை எச்சரித்தது.

மக்கள் அனைத்து தகவல்களையும் slbfe.lk இணையத்தளத்திலோ அல்லது 1989 ஹொட்லைன் மூலமோ 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button