...
செய்திகள்

இலங்கை (Sri Lanka identity numbers) அடையாளத்துடன் பிறப்பு சான்றிதழ்

 டிசம்பர் 07, 2021

பிறப்பு சான்றிதழை வழங்கும் பொழுது அதில் மேலும் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைவாக ,இலங்கை அடையாளத்தை(Sri Lanka identity numbers)  பிறப்பு சான்றிதழில் உள்வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தகவல் தொகுதி மூலம் இணையவழியூடான இலங்கை அடையாள இலக்கம் பதிவாளர் நாயகத் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen