செய்திகள்

இலத்திரணியல் மென்பொருளூடாக காணி உரிமங்களை பதிவு செய்வதற்கு, பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானம் ..

இலத்திரணியல் மென்பொருளூடாக காணி உரிமங்களை பதிவு செய்வதற்கு, பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

காணி உறுதிபத்திரங்களை பதிவு செய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சீ விதானகே குறிப்பிட்டார்.

போலி காணி உறுதிப் பத்திரங்கள் தயாரிப்பு தொடர்பில் வருடமொன்றுக்கு சுமார் மூவாயிரம் முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக காணி பதிவு செய்வதற்கான புதிய மென்பொருளை அடுத்த மாதம் தொடக்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் துரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காணி பதிவுகள் விரைவுபடுத்தப்படும் எனவும் பதிவாளர் நாயகம் என்.சீ விதானகே தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download