உலகம்

இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கிணற்றில் வீசிவன் கைது..

பள்ளி மாணவிகள், சிறுமிகள், இளம்பெண்களை உள்ளிட்ட பலரையும் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கிணற்றில் வீசி மறைத்த குற்றவாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா, தெலங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டம் ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தம் மாணவியின் கைப்பை பாவனையற்ற கிணற்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது. அங்கு, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றை ஆய்வு செய்தனர். அங்கு மாயமான சிறுமியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும், அந்தக் கிணறு இருந்த வீட்டின் உரிமையாளர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஹாஜிபூர் பகுதியில் பேருந்து வசதி இல்லாத‌தால் மாணவிகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் சீனிவாசன். அப்படி அந்த மாணவியையும் அழைத்துச் சென்றபோது பலாத்காரம் செய்து உடலை மறைக்க கிணற்றில் வீசியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு முன் மோனிஷா என்ற இளம்பெண்ணையும் பலாத்காரம் செய்து உடலை கிணற்றுக்குள் வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிணற்றில் சோதனையிட்டபோது, மேலும் பல எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல 4 ஆண்டுகளுக்கு முன் 2 இளம்பெண்கள் மாயமான சம்பவத்திலும் சீனிவாசனுக்கு தொடர்பு உள்ளதா? என பொலிஸார் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், கோபமுற்ற ஊர் மக்கள் சீனிவாசன் வீட்டை தீயிட்டு எரித்துள்ளனர். அத்தோடு பாலியல் வன்முறைக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென போராடி வருகின்றனர்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com