விளையாட்டு

இளம் அமெரிக்க ஒலிம்பிக் வீராங்கனைக்கு கொவிட் தொற்று !!!

17 வயதான அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் கோகோ காஃப் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதனால் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிட மாட்டார் என்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.காஃப் இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் குறிப்பிடத்தக்க பங்கெடுத்தலுக்கு பிறகு இது காஃப்பின் முதல் ஒலிம்பிக் தோற்றமாக இருந்தது.எனினும் தற்சமயம் அவருக்கு இந்த வாய்ப்பு கைநழுவிப் போயுள்ளது.

“நான் கொவிட்-க்கு சாதகமாக சோதித்தேன், அதனால் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட முடியாது என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன்” என ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Related Articles

Back to top button