மலையகம்

இளம் தாதியின் மரணத்திற்கு நியாயம் கோரி போராட்டம்

ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றிவந்த நிலையில், அண்மையில் இளம் தாதி ஒருவருவர் மரணமடைந்திருந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை – வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேசத்தைச் சேர்ந்த தாதி ஒருவர், வைத்தியர் ஒருவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தற்கொலை செய்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

அவரது மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என கோரி ஹட்டன் சிவில் அமைப்புகள் ஒன்று கூடி குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளது.

குறித்த தாதியின் மரணம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button